ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் சிலர் இன்று ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலமுகா தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் அஇமகா தலைவர் ரிசாத் பதியுதீன் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அவர்கள் மீளவும் பதவிகளை ஏற்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 11ம் திகதி சந்திப்பொன்றை திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment