முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு ஒட்டுமொத்தமாக பதவி துறந்தார்களோ அதே போன்றே ஒற்றுமையாக பதவி ஏற்பார்கள் என்று ஒன்றியத்தின் தலைவர் பெளசி தெரிவித்துள்ளார்.
கைதான அப்பாவி முஸ்லிம்களின் விடுதலை உட்பட சில பிரச்சினைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ள போதிலும் மேலும் சில பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதியுடனும் - பிரதமருடனும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் அதன் பின்னர் எவ்வாறு ஒற்றுமையாக பதவி விலகினார்களோ அவ்வாறே ஒற்றுமையாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பார்கள் என பௌசி தெரிவித்துள்ளார்.
இப்பின்னணியில் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்து தமது நிலைமையை விளக்குவதற்காகவே முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அங்கு சென்றிருந்ததாக அவரது ஊடகப் பிரிவு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment