முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்த பின்னரே தமது பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதாக வீராவேச அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் தமது பழைய பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன் மற்றும் அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் பதவிகளைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, அலி சாஹிர் மௌலானா, ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோர் பெரும்பாலும் நாளை பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment