ஈஸ்டர் தாக்குதலையடுத்து ஏற்பட்ட சூழ்நிலையில் தமது பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பதவியேற்பது தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியில் இன்று மாலை பிரதமரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே பதவிகளை ஏற்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்திருந்த போதிலும், சமூகத்தில் தற்போது நிலவும் உணர்வுகளை சமாளிக்கவும் பெரும் முயற்சிகள் இடம்பெறுகிறது. இந்நிலையில் திகன, அம்பாறை மற்றும் அண்மையன குருநாகல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டைத் தருவது தொடர்பில் இன்றைய தினம் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment