ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலான சூழ்நிலையில் பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஞ்சியிருப்போர் விரைவில் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
இடையில் கல்முனை அரசியல் சூழ்நிலையின் பின்னணியில் அனல் தெறிக்கும் வாக்குறுதிகளை வழங்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் இதில் உள்ளடக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், ரிசாத் பதியுதீன், ரவுப் ஹக்கீம், அலிசாஹிர் மௌலானா, ஹரீஸ், பைசல் காசிம், அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் தற்காலிகமாக கைவிட்ட பதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment