அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் (பொலிஸ்) ஊழியர் ஒருவரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த அபேசேகரவின் புதல்வர் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சிலாபம் பொலிசில் முறையிட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்தவும் முறையிட்டுள்ளதுடன் புதல்வர் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment