முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டம் தொடர்பிலான சிவில் சமூக பரிந்துரைகள் இன்றைய தினம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியின் அழைப்பின் பேரில் முஸ்லிம் கவுன்சில், வை.எம்.எம்.ஏ, முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் உட்பட முக்கிய அமைப்புகள் ஒன்று கூடி ஆராய்ந்திருந்த நிலையில் இன்றைய தினம் பரிந்துரைகள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாளைய தினம் பேருவளை பகுதியிலிருந்தும், தரீக்கா அமைப்புகள் சார்பிலும் வேறு பரிந்துரைகளும் கையளிக்கப்படவுள்ள நிலையில் அவையனைத்தின் அடிப்படையிலும் ஜம்மியத்துல் உலமா தமது இறுதி அறிக்கையை ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2009ம் ஆண்டு நீதிபதி சலீம் மார்சுப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினர் இது தொடர்பில் முன் வைத்த பரிந்துரைகள் தொடர்பில் முரண்பாடுகள் காணப்பட்டதன் பின்னணியில் இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில், இச்சட்டத் திருத்தத்தினை அவசரப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி தரப்பிலிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக சோனகர்.கொம்முக்கு அறியக் கிடைத்துள்ளது. ஒரு கட்டத்தில் ராவணா பலய இதனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வர முன்பதாக நீங்களாகவே திருத்துங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த குழுவில் அங்கம் வகிக்கும் முக்கிய நபர் ஒருவரிடம் கூறியிருப்பதாகவும் எமக்கு அறியக்கிடைத்துள்ளது.
எனினும், இது தொடர்பில் பல்வேறு மட்ட ஆலோசனைகள் இடம்பெறுகின்றமையை சுட்டிக்காட்டி நீதியமைச்சரிடமும் விளக்கமளித்துள் நிலையில், இன்று முன்ளாள் ஆளுனர் அசாத் சாலி தலைமையிலான பரிந்துரைகள் இன்று கையளிக்கப்பட்டுள்ளதோடு ஜம்மியத்துல் உலமா இது தொடர்பில் போதிய அவகாசத்தை எடுத்து செயற்படுமாறு சிவில் சமூகம் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment