MMDA: மனிதர்கள் கொண்டு வந்த சட்டத்தில் தான் இழுபறி: பேரியல் அஷ்ரப் - sonakar.com

Post Top Ad

Friday, 26 July 2019

MMDA: மனிதர்கள் கொண்டு வந்த சட்டத்தில் தான் இழுபறி: பேரியல் அஷ்ரப்



தற்போது அமுலில் இருக்கும் முஸ்லிம் விவாக-விவாகரத்து சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர முடியாமல் இருப்பது மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களில் உள்ள சிக்கலால் தான் என தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்.



நான்கு பெண்கள் அமைப்புகள் சேர்ந்து இன்றைய தினம் இது தொடர்பில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்தே பெரியல் அஷ்ரப் இவ்வாறு தெரிவித்ததுடன், குறித்த சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல தசாப்தங்களாக முன் வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் ஏதோ ஒரு காரணத்தினால் அது தடைப்பட்டு வருவதாகவும், தற்போதும் அதைத் தவற விடக்கூடாது எனவும் அங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இறைவனுடைய சட்டத்தில் யாருக்கும் அநீதியிழைக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லையெனவும், மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட சட்டத்தை திருத்துவதிலேயே இழுபறி நிலவுவதாகவும் பெரியல் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment