இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கப் போவதாக தெரிவித்துள்ள நிலையில் கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவே அதற்கான சிறந்த தெரிவென அக்கட்சி மட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜே.வி.பி அரசியல் பீடமே முழு அளவிலான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முறையான திட்டமிடல் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை, கட்சியின் முக்கியஸ்தர்கள் அநுர குமார போட்டியிடுவதையே விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஓகஸ்ட் 18ம் திகதியளவில் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment