மூன்று கட்டிட நிர்மாண நிறுவனங்களை நிறுவி அதன் பணிப்பாளராக பெயரிடப்பட்டுள்ள கிதர் முஹம்மத் சாப்தீன் எனும் நபர் ஒருவருக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபரின் வங்கிக் கணக்குக்கு சந்தேகத்துக்கிடமான முறையில் 55 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டு அது சந்தேகமான முறையில் மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் அதனை தீர விசாரிப்பதாகவும் FCID யினர் தெரிவிக்கின்றனர்.
புத்தளம், கொழும்பு 3 மற்றும் கொழும்பு 6 முகவரிகளில் வெ வ்வேறு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றிற்கு குறித்த நபரே பணிப்பாளராக பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதோடு கொழும்பு பங்குச் சந்தையில் குறித்த நபர் முதலிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அது பற்றி விசாரிக்கவுள்ளதாகவும் நீதிமன்றில் FCID யினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment