மருத்துவர் ஷாபிக்கு பிணை வழங்கியுள்ளமை மிகப்பெரிய அநீதியெனவும் இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல் எனவும் தெரிவிக்கிறார் ஆனந்த தேரர்.
அவ்வப்போது வில்பத்து விவகாரத்தை ஊடகங்களில் பேசி சர்ச்சையாக்கி வரும் ஆனந்த தேரர் நேற்றைய தினம் குருநாகல் சென்று அங்கு எதிர்ப்பாளர்களை ஊக்குவித்திருந்தார். அதற்கு முன்னைய தவணை அங்கு சென்று வந்த ரதன தேரர் ஜனாதிபதியை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததன் பின்னணியில் பின் வாங்கியுள்ள நிலையில் ஆனந்த தேரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, மருத்துவர் ஷாபி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையிலேயே பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
Who care this madness Dog!
Post a Comment