Dr ஷாபி வழக்கு: தொடர்ந்தும் விசாரணை; பலத்த எதிர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 11 July 2019

Dr ஷாபி வழக்கு: தொடர்ந்தும் விசாரணை; பலத்த எதிர்ப்பு!


மருத்துவர் ஷாபிக்கு எதிரான வழக்கு விசாரணை குருநாகல மஜிஸ்திரேட் நீதிமன்றில் தொடர்கிறது (இச்செய்தி எழுதப்பட்ட நேரம் இலங்கையில் மாலை 5மணி).

இன்றைய தினம் மதியம் வழக்கு விசாரணை சற்று நேரம் தடைப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் இலங்கை நேரம் 5 மணியிலிருந்து 5.30 வரை விசாரணை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் 5.30 அளவில் விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கிடையில் ஷாபி விடுதலையாகிவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்ற நிலையில் எதிர்த்தரப்பிலிருந்து பிணை வழங்கலை ஆட்சேபித்து கடுமையான வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாக சோனகர்.கொம் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சட்டவிரோத கருத்தடை குற்றச்சாட்டும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் ஷாபி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமையும் அங்கு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment