மருத்துவர் ஷாபியினால் குருநாகல் போதனா வைத்தியசாலையில் 4372 சிசேரியன் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை ஒரு முஸ்லிம் பெண் உட்பட 766 தாய்மார் தாமறியாமல் தமக்கு கருத்தடை செய்யப்பட்டிருக்கலாம் என முறையிட்டுள்ளதாகவும் தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில் ஷாபி இவ்வாறு சட்டவிரோத கருத்தடைகளை செய்திருப்பதாகவும் நீதிமன்றுக்கு இடைக்கால அறிக்கை வழங்கியுள்ளது வைத்தியசாலை நிர்வாகம்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பெண்களை மேலதிக பரிசோதனைக்குட்படுத்த நவீன வசதிகள் தேவைப்படுவதாகவும் அதனூடாக இவற்றை உறுதி செய்து கொள்ள முடியும் எனவும் வைத்தியசாலை பணிப்பாளரின் பரிந்துரையும் முன் வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அரசயில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் போலிப் பிரச்சாரங்கள் மேலோங்கியிருப்பதால் எதிர்வரும் வாரம் விசாரணைக்கு வரவுள்ள வழக்கு இழுபறிக்குள்ளாகலாம் எனவும் குடும்பத்தினர் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment