ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் விசாரணை நடாத்தி வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்றைய தினம் சிரேஷ்ட டி.ஐ.ஜி லத்தீப் மற்றும் அரச உளவுத்துறை பொறுப்பதிகாரி டி.ஐ.ஜி நிலந்த ஜயவர்தன ஆகியோரிடம் விசாரணை நடாத்தியுள்ளது.
டி.ஐ.ஜி நிலந்தவுடனான விசாரணைகள் இரகசியமாகவே நடாத்தப்பட்டுள்ளதுடன் ஊடகங்கள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர், முன்னாள் சட்ட-ஒழுங்கு அமைச்சின் செயலாளர் உட்பட பெருந்தொகை உயரதிகாரிகள் விசாரிக்கப்பட்டுள்ளமையும் ஓகஸ்ட் இறுதியளவில் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment