இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பின்னணியில் முன்னாள் டி.ஐ.ஜி ஹெக்டர் தர்மசிறிக்கு மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
2012ம் ஆண்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பதியப்பட்ட வழக்கிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த காலப்பகுதியில் சக பொலிஸ் ஊழியர்களைப் பாவித்துப் பெற்ற இலஞ்சம் ஊடாக தனக்கென சொகுசு வீடொன்றை நிர்மாணித்திருந்ததாக குறித்த நபருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இனறு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் சிறைத்தண்டனையும் மேலதிகமாக 3 லட்ச ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment