ஷரியா சட்டத்தின் கீழ் கிழக்கிலங்கையில் 20 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக அண்மையில் கடும்போக்கு வாத தேரர் மெதகொட அபேதிஸ்ஸ தெரிவித்த தகவலின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கென பிரத்யேக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடும்போக்குவாத தேரர்கள் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் அனுபவித்து வரும் பிரத்யேக சலுகைச் சட்டங்களை இல்லாதொழிப்பதற்கான செயற்திட்டங்களை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியில் இவ்வாறான குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment