பொது பல சேனாவின் செய்தியாளர் சந்திப்பில் தோன்றி அட்டுலுகமயில் தமக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக முறையிட்ட பெண்ணிடம் இன்றைய தினம் ஆறரை மணி நேரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்தியுள்ளனர்.
தனது கணவர் தன்னை 'இரும்புப் பெண்' என்றே கூறுவதுண்டு எனவும், தன்னைப் பற்றித் தற்போது பிரதேசத்தவர்களால் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரங்களைக் கண்டு சளைக்கப் போவதில்லையெனவும் அவர் பாத்திமா ஹைபா என அறியப்படும் குறித்த பெண் தெரிவிக்கிறார்.
அட்டுலுகம பள்ளி நிர்வாகம் சார்பில் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பொன்று நடாத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டிருந்த அதேவேளை, பள்ளித் தலைவரிடம் சோனகர்.கொம் இது குறித்து உரையாடியுள்ளதுடன் அவரை நேரலையில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment