ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்க்கத் தவறியதன் பின்னணியில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் சந்தேக நபர்களாக அறிவிக்கப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இருவரும் தனித்தனியாக வைத்தியசாலைகளில் அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாரேஹன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் பூஜிதவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹேமசிறியும் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை இருவரும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment