ஹெட்டிபொல பள்ளிவாசல்களுக்கு இலவச CCTV கமராக்கள் - sonakar.com

Post Top Ad

Thursday, 25 July 2019

ஹெட்டிபொல பள்ளிவாசல்களுக்கு இலவச CCTV கமராக்கள்



குருநாகல், ஹெட்டிபொல பிரதேசத்தில் உயித்த ஞாயிறு தினத்திற்குப் பின்னர் இனவன்முறையால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு இலவசமாக சி. சி. டி. வி கமரா வழங்கி வைக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட ஆறு ஜும்ஆப் பள்ளிவாசல்களுக்கு சிசிடிவி கமரா வழங்கி வைக்கும்  வைபவம் கொட்டாம்பிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசலில் அதன் தலைவர்  எம். ஆர்.எம். ஜலீல் தலைமையில் இடம்பெற்றது. 



இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வேவ்ஸ் சி. சி. டி கமரா நிறுவனத்தின் இயக்குனர்  எம். எம். எம்.  அஸாம் கலந்து கொண்டு சிசிடிவி கமராக்களை வழங்கி வைத்தார்.

பிரதேசத்தில் சிசிடிவி பாவனை இருந்ததன் பயனாக வன்முறையாளர்களை மாத்திரமன்றி முஸ்லிம்களுக்கு நட்பு பாராட்டிய பெரும்பான்மை சகோதர குடும்பங்களையும் கண்டறியக்கூடியதாக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வேவ்ஸ் சி. சி. டி கமரா நிறுவனத்தின் பணிப்பாளர் எம். ஐ. எம். ரஸ்லான், பண்டுவஸ்நுவர அபிவிருத்தி நிவாரண  அமைப்பின் தலைவர் முஹமட் ரியாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி



No comments:

Post a Comment