அண்மையிலேயே 48 மணி நேர அடையாள வேலை நிறுத்ததத்தில் ஈடுபட்டிருந்த தபால் சேவை ஊழியர்கள் மீண்டும் நாடளாவிய ரீதியில் சுகயீன லீவு போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை ஊடாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்க பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆட்சேர்ப்பு மற்றும் சம்பள பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அமைச்சு மட்டத்தில் முறையான தீர்வு வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment