சில பௌத்த துறவிகள் பற்றிய தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தான் ஒரு போதும் மன்னிப்பு கேட்கப் போவதுமில்லையெனவும் தெரிவிக்கின்ற ரஞ்சன் ராமநாயக்க, சில பிக்குகள் இளைய துறவிகளுக்கு எயிட்சையும் பரப்புவதாக தெரிவிக்கிறார்.
உடம்பில் பச்சை குத்தி, கஞ்சா மற்றும் போதைப் பொருள் பாவித்துக் கொண்டு, இளைய துறவிகளுக்கு எயிட்ஸ் பரப்பிப் கொண்டிருக்கும் எந்தத் துறவியிடமும் தாம் மன்னிப்புக் கோரத் தயாரில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், மகாநாயக்கர்கள் தன்னை வலியுறுத்தினால் அவர்களை தனது பேச்சு காயப்படுத்தியிருந்தால், அவர்கள் வேண்டுமானால் மன்னிப்பு கோரத் தயார் என தெரிவிக்கிறார்.
இதேவேளை, தனது நிலைப்பாட்டை பிரதமரிடமும் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக ரஞ்சன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.a
No comments:
Post a Comment