அட்டுலுகமயைச் சேர்ந்த பெண்ணொருவர், பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ததன் பின்னணியில் தமக்கு அநீதியிழைக்கப்பட்டதாக ஞானசாரவின் செய்தியாளர் சந்திப்பில் வைத்து நேற்றைய தினம் தெரவித்திருந்த கருத்துக்கள் பற்றி பொலிசார் அவதானம் செலுத்தியுள்ளனர்.
தனக்கு ஏற்பட்ட அநீதியை பொலிசார் தட்டிக் கேட்க மறுத்ததோடு தனது முறைப்பாட்டையும் விசாரிக்காது உதாசீனம் செய்ததாக குறித்த பெண் குறித்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்ததுடன் காணொளி பதிவொன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment