அட்டுலுகம பெண்ணொருவர், தமக்கு ஊராரால் (முஸ்லிம்களால்) ஏற்பட்ட அநீதிகள் என தெரிவித்திருக்கும் முறைப்பாடுகளின் பின்னணியில், அவ்வூராரால் குறித்த பெண்ணுக்கோ அவரது குழந்தைகளுக்கோ இடையூறு ஏற்படின் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறார் ஞானசார.
பௌத்தர் ஒருவரை மணமுடித்ததன் பின்னணியில் தனக்கு ஊராரால் பல்வேறு நெருக்குதல்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும் தனது கணவரை இஸ்லாத்துக்கு மாற்றுமாறும், முடியாத பட்சத்தில் கைவிட்டு விட்டு முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறும் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அதன் பின்னணியில் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் குறித்த பெண் பொது பல சேனா செய்தியாளர் சந்திப்பில் தோன்றி முறையிட்டிருந்தார்.
இதன் பின்னணியிலேயே, அட்டுலுகமயில் உள்ள ஹாஜியார்களின் நடவடிக்கைகள், பலவீனங்கள் பற்றியும் தாம் அறிவோம் எனவும் தேவையேற்படின் கடும் நடவடிக்கைக்குத் தயார் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment