ஜனாதிபதி நாடு திரும்பியதும் முஸ்லிம் 'அமைச்சர்கள்' பதவியேற்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 12 July 2019

ஜனாதிபதி நாடு திரும்பியதும் முஸ்லிம் 'அமைச்சர்கள்' பதவியேற்பு!


தனது புதல்வரின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஐக்கிய இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடு திரும்பியதும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தாம் தற்காலிகமாக விட்டு விலகிய பதவிகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.


ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், நெருக்குதல்களைத் தவிர்க்குமுகமாக அமைச்சு, பிரதியமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு மட்டத்திலான தமது பதவிகளை விட்டு தற்காலிகமாக விலகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் காலம் மலர்ந்துள்ளதாக நேற்றைய சந்திப்பில் முஸ்லிம் க்கள் இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, கூட்டு இராஜினாமாவினால் முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் ஒற்றுமை மலர்ந்துள்ளதாக சமூகம் நம்பிக்கை கொண்டிருந்தமையும் எதிர்கால ஒற்றுமை குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லையென சோனகர்.கொம் நேரலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment