ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) ஆதரவளிக்கப் போவதாக தெரிவிக்கிறார் மஹிந்த அமரவீர.
இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மஹிந்த தரப்புடனான நட்பைக் கட்டியெழுப்பவும் திணறுகின்ற அதேவேளை, இவ்விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment