ஷாபியின் அடிப்படை உரிமை மனு விசாரணை தள்ளி வைப்பு - sonakar.com

Post Top Ad

Monday 22 July 2019

ஷாபியின் அடிப்படை உரிமை மனு விசாரணை தள்ளி வைப்பு


தனது கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி மருத்துவர் ஷாபியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை ஓகஸ்ட் மாதம் 6ம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.



மூவர் கொண்ட நீதிபதிகள் குழு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தமக்கு இது தொடர்பிலான அறிவித்தல் கிடைக்கப் பெறவில்லையென பிரதி சட்டமா அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவுக்கு மீண்டும் பிரதிவாதிகளுக்கான அறிவித்தலை அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளமையும் இன்னும் சில தினங்களில் மீண்டும் குருநாகல் மஜிஸ்திரேட்டில் மற்றைய  வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment