போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு தான் மரண தண்டனை வழங்க எடுத்திருக்கும் முயற்சிக்கு எதிராக நீதிமன்றை நாடியிருப்பவர்கள் போதைப் பொருள் வர்த்தகத்தில் இலாபமீட்டுபவர்களே என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
மேற்குலக நாடுகள், மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தான் இவ்விவகாரத்தில் உறுதியாகவே இருப்பதாக தெரிவிக்கின்ற ஜனாதிபதி, நாட்டை சீரழிக்கும் எண்ணமுள்ளவர்களே எதிர்த்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை, மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக தற்காலிக நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment