சிறையிலிருந்தே முதுகலை பட்டம் பெற்ற மரண தண்டனை கைதி! - sonakar.com

Post Top Ad

Thursday, 11 July 2019

சிறையிலிருந்தே முதுகலை பட்டம் பெற்ற மரண தண்டனை கைதி!


இலங்கையின் வரலாற்றில் சிறையிலிருந்தவாறே தனது முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திக்க பமுனுசிங்க எனும் நபர்.


உலகிலேயே  இவருடன் சேர்த்து ஐவரே இவ்வாறு சிறையிலிருந்த நிலையில் முதுகலைப் பட்டம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

2017ம் ஆண்டு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலையில் சமூக விஞ்ஞானத்துறையில் தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்த இந்திக்க தற்போது களனி பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளார்.

தன்னோடு சிறையில் இருந்த பேராசிரியர் ஒருவரின் உதவியுடனேயே தான் கல்வியைத் தொடர்ந்ததாக இந்திக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment