ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து கடிதம் ஒன்றை ஒப்படைக்க இன்றைய தினம் (23) உண்ணாவிரதம் புகழ் ரதன தேரர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து அவர் கடுங்கோபத்தை வெளியிட்டுள்ளார்.
மருத்துவர் ஷாபி விவகாரத்தை கையிலெடுத்து அமளியில் ஈடுபட்டு வரும் ரதன தேரர், ஜனாதிபதியை இவ்விவகாரம் தொடர்பில் சந்தித்து மனுவொன்றை கையளிக்க முயன்ற நிலையிலேயே அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் பிரதிநிதியான தமக்கு தாம் தேர்ந்தெடுத்த ஜனாதிபதியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தாம் வீதியிலிறங்கி போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment