கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படக்கூடும் என்ற சிந்தனை தனக்கு அறவே இல்லையென தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
தன்னைப் பொறுத்தவரை நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்க எப்போதும் தயாராக இருப்பதாகவும் அதற்கெனவே தான் தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் சஜித் மேலும் தெரிவிக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீவிர ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை கட்சியிலிருந்தே வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment