1932ம் ஆண்டில் வஹாபிய அடிப்படைவாதத்தினால் வரையப்பட்ட இஸ்லாமிய ராஜ்ய வரைபடத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நசரிஸ்தான் - சபிஸ்தான் போன்ற பகுதிகள் சஹ்ரான் உருவான கிழக்கு மாகாணமே என தெரிவிக்கிறார் மது மாதவ.
மினுவங்கொட இனவன்முறையின் போது 'போக்குவரத்து' நெரிலை பார்க்கச் சென்றதாகக் கூறும் மதுமாதவ, வஹாபிய அடிப்படைவாதத்தில் இவ்வாறு உருவாக்கப்பட்ட உலக வரைபடத்தில் இப்பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை, விமல் - கம்மன்பில ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அவரோடு உரையாற்றிய கிழக்கிலிருந்து தமிழ்க் கட்சியொன்றின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட விஷ்னு காந்தன் என்பவர் கிழக்கு மாகாணம் என்பது கிழக்கிஸ்தான் எனவும் அதனை சிங்களவர்கள் இனி நெகரிஸ்தான் என அழைக்க வேண்டும் எனவும் சஹ்ரான் இறந்தாலும் இன்னும் அவனது தலைவன் இறக்கவில்லையெனவும் தெரிவித்திருந்தார்.
இலங்கைத் தீவுக்கு இன்று இவ்வாறு பல புதிய பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment