ஜனாஸா அறிவித்தல்: ஓட்டமாவடி யாகூப் (குவைத்) - sonakar.com

Post Top Ad

Friday, 26 July 2019

ஜனாஸா அறிவித்தல்: ஓட்டமாவடி யாகூப் (குவைத்)


மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடிசைச் சேர்ந்த நபரொருவர் குவைத்தில் மரணமான சம்பவமொன்று இன்று (26) இடம்பெற்றுள்ளது.



குவைத்தில் சாரதியாக பணிபுரியும் ஓட்டமாவடி - 2ம் வட்டாரம் எம்.கே.வீதியைச் சேர்ந்த அபுசாலி யாகூப் (வயது 42) என்பவரே குவைத்தில் மரணமடைந்துள்ளார்.

உறவினர் ஒருவரின் அறையில் இருக்குப்போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான மரணமடைந்த குறித்த நபரின் உடல் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு உடலை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment