சம்மாந்துறை: தரம் மூன்று மாணவர்களின் பண்டிகைக் கொண்டாட்ட வகுப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 July 2019

சம்மாந்துறை: தரம் மூன்று மாணவர்களின் பண்டிகைக் கொண்டாட்ட வகுப்பு


சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய தரம் மூன்று ஏ வகுப்பு மாணவர்களின் பண்டிகைக் கொண்டாட்டம் வகுப்பாசிரியர் திருமதி முஜீனின் வழிகாட்டலில் இன்று (24) புதன்கிழமை பாடசாலையில் நடைபெற்றது. 


இதன்போது குறித்த வகுப்பு மாணவர்கள் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மதங்களுக்கு ஏற்றவாறு நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு அம்மதத்தவர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளை கொண்டாடினர். 

மேலும் குறிப்பிட்ட இனத்தவர்களின் கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடை அணிந்து பாரம்பரிய உணவுகள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.

மாணவர்கள் சகல இனத்தவர்களின் பண்டிகைக் கொண்டாட்டங்களையும் அறிந்துகொள்ளும் வகையில் இடம்பெற்ற இப்பண்டிகைக் கொண்டாட்டத்தில் தாறுல் உலூம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். கலீல், ஆங்கில ஆசிரியர் எம்.எச்.எம். ஜிப்ரி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் உபசாரங்களை ஏற்றுக்கொண்டனர்.

-அகமட் எஸ். முகைடீன்

No comments:

Post a Comment