டிசம்பர் மாதமளவில் மீண்டும் நாட்டில் ரணசிங்க பிரேமதாசவின் அபிவிருத்தி யுகம் ஆரம்பிக்கும் என தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை முன் நிறுத்திக்கொள்ளும் முனைப்பில் பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள சஜித் நாட்டின் பல இடங்களுக்க விஜயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நாஉல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே இன்று இவ்வாறு தெரிவித்துள்ள அவர், யார் யாரோ வருவார்கள் என்கிறார்கள், இறுதியில் யார் வரப் போகிறார்கள் என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment