ஈஸ்டர் தாக்குதலைத் தவிர்ப்பதற்கான அனைத்து வழிமுறைகளும் இருந்தும், அதிகார வெறிபிடித்திருக்கும் அரசியல்வாதிகள் அதனைத் தவிர்க்காது போனமை நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்துள்ள கார்டினல் மல்கம் ரஞ்சித், எமது தலைவர்களுக்கு முதுகெலும்பில்லையென தெரிவிக்கிறார்.
இலங்கை ஒரு புனித பூமியென தெரிவிக்கின்ற அவர், அதனை முறையாகப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இருக்கிறதெனவும், ஈஸ்டருக்கு முன்பாகவே வனாத்தவில்லு மற்றும் மாவனல்லை சம்பவங்களில் கைதானவர்களையும் விடுவித்து வெளிநாட்டு தேவைகளுக்காக பலவீனமான இளைஞர்கள் பலியாவதற்கு இந்த தலைவர்களே வழி சமைத்துக் கொடுத்ததாகவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், இப்பூமியை வழி நடாத்த முடியாதவர்கள் வேறு நபர்களுக்கு வழி விட்டு விலகிக் கொள்ள வேண்டும் எனவும் இன்றைய தினம் கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment