இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் ஒரே சட்டமே இருக்க வேண்டும் என தெரிவிக்கும் உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர், இதனை வலியுறுத்தி எதிர்வரும் வாரம் தான் நாடாளுமன்றில் தனி நபர் பிரேரணையொன்றை முன் வைக்கவுள்ளதாக தெரிவிக்கிறார்.
நாட்டின் சட்டதிட்டம் எவ்வாறாக இருப்பினும் முஸ்லிம்களுக்கான பிரத்யேக சட்டம் ஊடாக 13 வயது பெண்ணும் திருமணம் முடிக்கலாம் என்றிருப்பதாகவும் இந்த நிலையால் பல இடங்களில் சிறுமிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்காக நியமிக்கப்பட்ட குழு ஒன்பது வருடங்களாக முடிவொன்றைக் காண இயலாது இரு அணிகளாகப் பிரிந்திருந்து கருத்து மோதலில் ஈடுபட்டிருந்தமையும் ஈஸ்டர் வரை முடிவொன்றைக் காணவில்லையென்பதும் நினைவூட்டத்தக்கது.
1 comment:
மேலேயுள்ள துறவிம் இன்னும் பல துவேஷக்கார துறவிகளையும் பௌத்த மக்களே கணக்கு எடுக்கிறதில்லை அவைகளை பற்றி நாங்களும் பெரிசாக அலட்டிக்கொள்ள தேவையில்லை.உலகில் எங்கு சரி முஸ்லிம்களோடு பிரச்சினைகள் செய்து யாரும் வெற்றி அடைந்தார்கள் என்று வரலாறு இருக்கின்றனவா!!
Post a Comment