குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் புனரமைக்கப்பட்ட நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயம், (21) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதி ஆயர் கலாநிதி ஜே.டி. அந்தோனி ஜயகொடி இதனைத் தெரிவித்தார்.
மேலும், குறித்த குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட ஆராதனைகள் நடத்தப்படும் என்பதோடு, இத்தேவாலயம் மீளவும் திறந்து வைக்கப்பட்ட பின்னர், மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும், கொழும்பு பிரதி ஆயர் மேலும் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில், கட்டுவாப்பிட்டிய தேவாலயமும் இலக்கானமை குறிப்பிடத்தக்கது.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment