குருநாகல் மருத்துவர் ஷாபி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்துக்கிடமான முறையில் மருத்துவர் ஷாபி சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அதுவும் நிரூபிக்கப்படாத பின்னணியில் இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்றைய வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் நீண்ட பரிசீலனையின் பின் 250,000 ரொக்கம் மற்றும் 2.5 மில்லியன் பெறுமதியான நான்கு சரீரப் பிணையில் மருத்துவர் ஷாபியை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஞாயிறு தோறும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment