அண்மையில் விமல் வீரவன்ச - உதய கம்மன்பில ஆகியோரால் நுகேகொடயில் நடாத்தப்பட்டிருந்த வஹாபிச எதிர்ப்பு பொதுக் கூட்டத்துக்கு சென்றவர்களை மஹிந்த ராஜபக்ச கடிந்து கொண்டதாக விமல் தரப்பு தெரிவிக்கிறது.
மேடையில் வீற்றிருந்த பிக்கு ஒருவரை அத்தருணத்திலேயே தொடர்பு கொண்டிருந்த மஹிந்த அங்கு அனாவசியமான பேச்சுக்களை தவிர்த்துக் கொள்ளும்படி எச்சரித்ததையடுத்து குறித்த பௌத்த துறவி தனது 'பேச்சையும்' மாற்றிக் கொண்டதாக விமல் தரப்பு தெரிவிக்கிறது.
குறித்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பெரமுன சார்பில் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் விமல் - உதய கம்மன்பில - மது மாதவ போன்றோரே கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment