ராஜபக்ச குடும்ப ஊழல்கள், மஹிந்த அரசின் தவறுகள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட விசேட உயர் நீதிமன்றத்தில் டி.ஏ ராஜபக்ச நூதனசாலை விவகாரத்தை விசாரிக்க தற்காலிக தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
விசேட நீதிமன்றம் இயங்குவதற்கான அடிப்படை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒக்டோபர் முதலாம் திகதி வரை இதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் சார்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் அடிப்படையில், இத்தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை விசேட உயர் நீதிமன்றங்கள் ஊடாக தொடர்ச்சியாக தினசரி விசாரணை நடாத்தப்பட்டு துரிதமாக தீர்ப்புகள் வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி நெடுங்காலமாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment