குடிபோதையில் வாகனம் செலுத்தி இரு தடவைகள் மாட்டிக்கொள்ளும் நபரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை முற்றாகத் தடை செய்வதற்கான வகையில் போக்குவரத்து சட்டவிதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான அபராதத் தொகைகளும் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யவும் முடியும் என பொலிஸ் தரப்பு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment