இலங்கையில் அனைத்து சமூகங்களையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவருவதே ஈஸ்டர் தாக்குதலில் தம் உயிர்களை நீத்த 254 பேருக்கும் வழங்கும் கௌரவம் என தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அல்லாஹ்வை வழிபடுவோர் தவிர ஏனையோரைக் கொல்ல வேண்டும் என்ற தீவிரவாத சிந்தனை கொண்டோரும் இந்நாட்டில் உருவாகியிருப்பது இப் பலவீனத்தின் காரணத்தினாலேயே என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு சமய முரண்பாடுகள் இருக்கும் நிலையில் சமயங்களின் அடிப்படையில் பிரத்யேகமான சட்டங்களைப் பின்பற்ற அனுமதிப்பது அபாயகரமானது எனவும் அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டமே நாட்டில் இருக்க வேண்டும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment