அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புதிய நிர்வாக சபை விபரம் - sonakar.com

Post Top Ad

Saturday, 13 July 2019

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புதிய நிர்வாக சபை விபரம்



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவுக்கான மத்திய சபைக் கூட்டம் இன்று 13.07.2019 ஆம் திகதி சனிக் கிழமை காலை 10:00 மணி முதல் தெஹிவளை ஜுமுஆ மஸ்ஜிதில் ஆரம்பமானது.



அஷ்-ஷைக் பிர்தவ்ஸ் காரி அவர்களின் கிறாஅத்துடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. கிறாஅத்தை தொடர்ந்து அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் அவர்கள் வரவோற்புரையை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடந்து பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்களால் மூன்றாண்டுக்கான செயற்பாட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்கள் மூன்றாண்டுக்கான கணக்கறிக்கையை சமர்ப்பித்தார்கள். பின்னர் தலைவர் உரை அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் றிழ்வி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இத்துடன் பழைய நிறைவேற்றுக் குழு கலைக்கப்பட்டது.

ஜம்இய்யா சட்டயாப்பின் பிரகாரம் அதனது நிறைவேற்றுக் குழு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஜம்இய்யாவின் மத்திய சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

மேற்படி தெரிவின்போது தற்காலிகத் தலைவராக அஷ்-ஷைக் ஏ.எல்.எம்.ரிழா மக்தூமி அவர்கள் கடமையாற்றினார்கள். அவர்களுக்கு உதவியாக சட்டத்தரணி அஷ்-ஷைக் அஷ்ரப் நளீமி அவர்களும்; அஷ்-ஷைக் ஹாஷிம் ஷ_ரி அவர்களும் கடமையாற்றினார்கள்.   

மத்திய சபை உறுப்பினர்களான 24 மாவட்டக் கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உட்பட 101 பேர் அழைக்கப்பட்டிருந்த மேற்படி கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பின்வரும் 25 பேர்கள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் அவ்வாறே பதவி தாங்குனர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.



1)            அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி                             கௌரவ தலைவர்

2)            அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்                    கௌரவ பிரதித் தலைவர்

3)            அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்                          கௌரவ செயலாளர்

4)            அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல்                               கௌரவ பொருளாளர்

5)            அஷ்-ஷைக்;                எச். உமர்தீன்                   கௌரவ உப தலைவர்

6)            அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா                               கௌரவ உப தலைவர்

7)            அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக்                  கௌரவ உப தலைவர்

8)            அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம்                        கௌரவ உப தலைவர்    

9)            அஷ்-ஷைக்;                எஸ்.எச் ஆதம்பாவா        கௌரவ உப தலைவர்

10)          அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முர்ஷித்                        கௌரவ உப செயலாளர்

11)          அஷ்-ஷைக்;                எம்.எஸ்.எம் தாஸிம்        கௌரவ உப செயலாளர்

12)          அஷ்-ஷைக் எம். அனஸ்                                     கௌரவ உப பொருளாளர்

13)          அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்                   கௌரவ உறுப்பினர்

14)          அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாஸில்                       கௌரவ உறுப்பினர்

15)          அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்             கௌரவ உறுப்பினா

16)          அஷ்-ஷைக் அர்கம் நூறரமித்                          கௌரவ உறுப்பினா

17)          அஷ்-ஷைக் எம்.எம். ஹஸன் பரீத்                   கௌரவ உறுப்பினர்

18)          அஷ்-ஷைக் எம்.எச்.எம். யூஸுப்                      கௌரவ உறுப்பினர்

19)          அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில்                            கௌரவ உறுப்பினர்

20)          அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்                              கௌரவ உறுப்பினர்

21)          அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான்             கௌரவ உறுப்பினர்

22)          அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர்                           கௌரவ உறுப்பினர்

23)          அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்  கௌரவ உறுப்பினர்

24)          அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான்           கௌரவ உறுப்பினர்

25)          அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்                 கௌரவ உறுப்பினர்



அல்லாஹுத் தஆலா எம் அனைவரினதும் நல்லமல்களைப் பொருந்திக் கொள்வானாக!


அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்   
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment