நிந்தவூர் 14ம் பிரிவு 153 மௌலானா வீதி வீடொன்றில் இன்று காலை 9 மாதங்களே நிரம்பிய இரட்டைக் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
குழந்தைகளை வெட்டிக் கொன்ற சந்தேகத்தில் குழந்தைகளின் தாயான 26 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலையைப் புரிந்து விட்டு அதனைத் தன் கணவரிடம் குறித்த பெண் தெரிவித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
-பாறுக் ஷிஹான்
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment