தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ரியுனிசியாவில் பொது சேவை நிறுவனங்களுக்கு செல்வோர் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் அணிவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஜுன் 27ம் திகதி தலைநகரில் இடம்பெற்ற இரட்டைக் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் பாதுகாப்பு காரணங்களை முன் வைத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
2011ம் ஆண்டே முழுமையாக முகத்தை மூடும் வகையிலான ஆடைகளுக்கு மீளவும் அனுமதி வழங்கப்பட்டிருந்த அதேவேளை அதற்கு முன்னரும் அங்கு அவ்வகை ஆடைகள் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment