விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதாக தெரிவித்து பதவி விலகிய ரிசாத் பதியுதீன் விசாரணை முடிந்தா மீண்டும் அமைச்சராகியுள்ளார் என விசனம் வெளியிட்டுள்ளார் விமல் வீரவன்சவின் சகா முசம்மில்.
திட்டமிட்ட முறையில் தற்காலிக விடுமுறை நாடகத்தை அரங்கேற்றியவர்கள் மீண்டும் பதவியேற்று மக்களை ஏமாற்றியிருப்பதாக தெரிவிக்கும் அவர், எந்த விசாரணையும் எந்த நீதிமன்றத்திலும் இடம்பெறவில்லையென தெரிவிக்கிறார்.
இதேவேளை, பதவி விலகிய முஸ்லிம் ஆளுனர்கள் மற்றும் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமையும் அக்குழு, தீவிரவாதத்துடன் குறித்த முஸ்லிம் பிரமுகர்களுக்குத் தொடர்பிருப்பதாக எவ்வகையான முறைப்பாடும் வரவில்லையெனவும் சபாநாயகருக்கு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்குது.
No comments:
Post a Comment