பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பள்ளிவாசல் எனும் பெயரில் இயங்கும் 'அனுமதியில்லாத' இடங்களை தடை செய்வதோடு பிரதேசத்தில் புதிய பள்ளிவாசல்கள் உருவாக்கத்தை முற்றாகத் தடை செய்வதற்கான பிரேரணையொன்று பியகம பிரதேச சபையில் எதிர்வரும் நான்காம் திகதி முன் வைக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
நான்காம் திகதி அமர்வின் போதான விவாதத்திற்கு பிரதேச சபை தலைவர் ஏ.சி. கன்னேபொலவினால் இப்பிரேரணை முன் வைக்கப்படவுள்ள விபரம் சோனகர்.கொம்முக்கு கிடைத்துள்ளது.
இப்பிரதேசத்தில் கொள்கை இயக்க பிளவுகளின் அடிப்படையில் இவ்வாறான மாற்று வழிபாட்டுத்தளம் இயங்கி வருவவதோடு சுமார் 25,000 முஸ்லிம்கள் வாழும் இப்பகுதியில் 20க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களும் இயங்கி வருவதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
-N.Nawas
-N.Nawas
No comments:
Post a Comment