பதவிகளை பெறுவது தொடர்பில் அடுத்த சந்திப்பில் ஆராய்வு - sonakar.com

Post Top Ad

Tuesday, 9 July 2019

பதவிகளை பெறுவது தொடர்பில் அடுத்த சந்திப்பில் ஆராய்வு


நேற்றிரவு ஜனாதிபியுடனான சந்திப்பில் கலந்து கொண்டுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீளவும் பதவிகளைப் பெறுவது தொடர்பில் தமக்கிடையிலான அடுத்த சந்திப்பில் வைத்து தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.



நாளை அல்லது மறுதினம் நாடாளுமன்ற வளாகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில் நேற்றைய சந்திப்பில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியதாகவும் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அவசர கால சட்டம் திரும்பவும் நீட்டிக்கப்படாது எனவும் சந்திப்பின் பின் முஸ்லிம் MPக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment