இன்றைய தினம் கண்டியில் இடம்பெறவுள்ள பொது பல சேனாவின் பொதுக் கூட்டம் போகம்பர மைதானத்தில் இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவாகியுள்ளதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
10,000 பௌத்த பிக்குகள் உட்பட பாரிய கூட்டத்தைக் கூட்டி நாட்டில் முஸ்லிம் சமூகம் எப்படி வாழ வேண்டும் எனும் பிரகடனம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமது பொதுக் கூட்டத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றமையும் கண்டியில் பெரும்பாலான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment