பொலிசாரிடமிருந்து தப்பியோடி யானையிடம் மாட்டிக்கொண்ட நபர்! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 July 2019

பொலிசாரிடமிருந்து தப்பியோடி யானையிடம் மாட்டிக்கொண்ட நபர்!


சட்டவிரோதமாக இரத்தினக் கல் அகழ்வில் ஈடுபட்டதன் பின்னணியில் பொலிசாரின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பியோடிய நபர் ஒருவர் யானையிடம் சிக்கித் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நாஉலயில் இடம்பெற்றுள்ளது.



நாஉல, அம்பன்கஹ வனப்பகுதியருகில் மொரகஹகந்த பிரதேசத்தில் இவ்வாறு சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் பின்னணியில் இச்சுற்றி வளைப்பு இடம்பெற்றதாகவும் இதன் போது அகழ்வில் ஈடுபட்டிருந்த குழுவினர் தப்பியோடியதாகவும் அதில் ஒருவரே இவ்வாறு யானைத் தாக்குதலுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொன்கஹவல பகுதியைச் சேர்ந்த 47 வயது மடே முதியன்சலாகே திலகரத்ன எனும் நபரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment